Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த பெண்…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணிடம் 7 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெங்கமேடு பகுதியில் கிருபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கவுரி கடந்த 13-ம் தேதி ஸ்கூட்டரில் வெங்கமேட்டிலிருந்து சாமந்தக்கோட்டைக்கு சென்றுள்ளார்.

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கவுரி அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கவுரி திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தங்க நகையை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |