பராகுவே நாட்டில் கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்கும் மேலாக காட்டு தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. அதாவது பராகுவே நாட்டில் உள்ள காப்புகூ என்ற நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று குப்பைகள் எரிக்கப்பட்ட போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் விளைநிலங்கள் மற்றும் 24 ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டது. மேலும் மாடுகள், குதிரைகள், ஆடுகள் என 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இந்த பயங்கர தீயில் சிக்கி உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த கடுமையாக போராடி வருகின்றனர்.