தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய போது ஏ.டி.எம் சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டது. இந்த நிலையில் அந்நாட்டில் மீண்டும் நேற்று முதல் ஏ.டி.எம் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கியான டா ஆப்கானிஸ்தான் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வங்கிகளின் ஒன்றியம் மற்றும் வணிக வங்கிகளுடன் நடத்தப்பட்ட தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் வங்கி சேவைகள் மற்றும் வங்கி அமைப்பு மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஏ.டி.எம் சேவைகள் குறிப்பிட்ட சில பகுதிகளில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் 20 ஆயிரம் ஆப்கானியை மட்டுமே ஒரு நபர் ஒரு வாரத்திற்கு எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.