உத்திரபிரதேசத்தில் ஆளும் பாஜகவை அதிர வைக்கும் வகையில் அகிலேஷ் யாதவ் பாஜக தலைவர்களை அடுத்தடுத்து கொக்கி போட்டு தூக்கி கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக அகிலேஷ் யாதவ் ஓபிசி தலைவர்களை குறிவைத்து தூக்குகிறார். இந்த நிலையில் பாஜக 107 வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்துள்ளது. அதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் அர்பன் தொகுதியில் ஸ்டார் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் தான் பாஜக தனது கில்லாடித்தனத்தை காட்டியுள்ளது. அதாவது இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் இடங்களில் மொத்தம் 113 தொகுதிகள் உள்ளது. அதில் பாஜக முதல் கட்டமாக 107 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில் தலித் மற்றும் ஓபிசி வேட்பாளர்கள் 60% பேர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். அந்த வகையில் தலித்கள் 19 பேர் ( 13 பேர் ஜாதவ் சமூகம் ) மற்றும் ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர்கள் 44 பேர் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 10 பேர் பிராமணர்கள், 18 பேர் தாக்கூர் சமூகத்தினர், 8 பேர் வைசியர்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள். இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சியின் தலித் வாக்கு வங்கி மற்றும் அகிலேஷ் யாதவின் ஓபிசி வாக்கு வங்கி இரண்டையும் முறியடிக்கும் வகையில் பாஜக இந்த அதிரடியான செயலில் இறங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.