Categories
தேசிய செய்திகள்

கொடுமையோ கொடுமை…. பெற்ற தாயை கட்டி வைத்து பலாத்காரம் செய்த மகன்…. பதற வைக்கும் சம்பவம்….!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்திலுள்ள புத்தூர் வட்டத்தில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் தனது தாயை இருமுறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர். அந்த நபரின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு உணவுக்கு பின்னர் 58 வயது மதிக்கத்தக்க அந்த தாயும், மகனும் உறங்கச் சென்றனர்.பிறகு நள்ளிரவைத் தாண்டி 3 மணி அளவில் அந்த இளைஞர் தனது தாயின் அறைக்குச் சென்று அவரின் வாயில் துணியை அடைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

மேலும் அந்த இளைஞர் இது குறித்து யாரிடமாவது கூறினால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அத்தோடு அந்த நபர் விட்டுவிடவில்லை. காலையிலும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். அதன் பிறகு காவல் நிலையத்தில் கொடூரமாக நடந்து கொண்ட மகன் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Categories

Tech |