Categories
தேசிய செய்திகள்

ஓடும் பஸ்ஸில் திக் திக்…. சிங்கப் பெண்ணின் பகிரங்க செயல்…. வைரல் வீடியோ….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வேளாண் சுற்றுலா மையத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மினி பஸ்ஸில் சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும்பினர். அப்போது டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவருக்கு கை கால்கள் இழுத்த நிலையில் பேருந்தில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பயந்து நடுங்கி அழத் தொடங்கினார். அப்போது அந்தப் பேருந்தில் பயணம் செய்த யோகிதா சாவத் (42) என்ற பெண், டிரைவரை ஓரமாக அமரவைத்துவிட்டு, பேருந்தை மருத்துவமனைக்கு ஓட்டினார். அதன்பிறகு டிரைவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

இதையடுத்து அனைத்து பெண்களையும் வகோலியில் இறக்கி விட்டார். தனக்கு கார் ஓட்ட தெரிந்ததால் பேருந்தை ஓட்டுவதற்கு முடிவு செய்ததாகவும், டிரைவருக்கு சிகிச்சை அளிப்பது தான் முதல் முக்கியமான பணி என்பதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பேருந்தை ஓட்டிச் சென்று அவரை அங்கே சேர்த்ததாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். இப்படி ஒரு நெருக்கடியான நேரத்தில் பதற்றமடையாமல் துணிச்சலாக சுமார் 10 கிலோமீட்டர் தூரம் பேருந்தை ஓட்டிய அந்தப் பெண்ணுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |