இங்கிலாந்து நாட்டின் தலைநகரில் கூகுள் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் வசதியாக பணியாற்றுவதற்காக 7,500 கோடி ரூபாயில் மிகப்பெரிய கட்டிடம் ஒன்றை வாங்கியுள்ளது.
இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் பிரபல கூகுள் இணையதள நிறுவனத்தில் சுமார் 6,400 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களை 10,000 உயர்த்துவதற்கு கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் லண்டனில் 7,500 கோடி ரூபாயில் புதிய அலுவலகம் அமைப்பதற்காக மிகப்பெரிய கட்டிடம் ஒன்றை கூகுள் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. இந்த கட்டிடத்தை ஊழியர்கள் மிகவும் வசதியாக பணியாற்றும் வகையில் புதுப்பிப்பதற்கு கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.