Categories
தேசிய செய்திகள்

“எங்க இருந்துடா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க”…. திருமணமான கையோடு ஆம்புலன்ஸில் ஊர்வலம்…. நடந்தது என்ன?….!!!!

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள கட்டணம் பகுதியில் புதிதாக திருமணமான ஜோடி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ஆம்புலன்ஸ் உரிமையாளருக்கு மோட்டார் வாகனத் துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் மோட்டார் வாகன சட்டப்படி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தன்னுடைய உரிமத்தை இழக்கும் அளவுக்கு சென்றுள்ளார். இந்த விவகாரம் கேரளாவின் சுகாதாரத் துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸில் சென்றது தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் என்றும், புதுமண தம்பதி ஆம்புலன்ஸில் வந்தது மட்டுமே உண்மை. சைரன் ஒலி ஏதும் எடுக்கப்படவில்லை என புகாருக்கு ஆளான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |