தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் ஒருபுறம் இருக்க கடந்த சில வாரங்களாகவே பலருக்கு நச்சுக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் கூட்டம் அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுவிதமான இந்த காய்ச்சல் கண்டவர்களுக்கு தொண்டையில் வலி, மூக்கு ஒழுகுதல், வாந்தி , அதிக மூட்டுவலி ஏற்படுகிறது.
காய்ச்சல் தொற்றுநோய் போல் பரவுகிறது என்பதால் உடலில் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கும் உணவு வகைகளை இந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முகக் கவசம் அணிதல் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடித்தால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இது தமிழக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.