Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்….. குழந்தைகளை தாக்கும் ஒமைக்ரான்…. என்னென்ன அறிகுறிகள்?…. எய்ம்ஸ் இயக்குனர் பகீர் தகவல்….!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஏற்படும் பாதிப்புகள் 80 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் ஒமைக்ரான் பாதிப்புகளாக இருக்கின்றன. இதன் பாதிப்பு மிகவும் லேசான அறிகுறி இருப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவது இல்லை. தலைவலி, இருமல், மூக்கில் சளி தொல்லை , வறண்ட தொண்டை மற்றும் உடல் அதிக சோர்வாக காணப்படுதல், லேசான காய்ச்சல், கை கால்கள் வலி மற்றும் மூட்டு வலி ஆகிய 8 அறிகுறிகள் இந்த நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் குழந்தைகளிடையே தீவிரமான ஒமைக்ரான் பரவல் ஏற்பட்டு வருவதாக இயக்குனர் ரன்தீப் குளேரியா தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு வேகமாக ஒமைக்ரான் பரவி வருகிறது. இதில் பலருக்கு தீவிர பாதிப்புகளும் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு எதிர்ப்பு அதிகம் இருக்கலாம். இது குழந்தைகளிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படாமல் இருப்பது தான் இதற்கு முதல் காரணம். அமெரிக்காவில் கொரோனா காரணமாக குழந்தைகள் மரணம் அடைவது அதிகரித்துள்ளது. குழந்தைகள் பலர் திடீரென கொரோனாவால் பாதிக்கப்படுவதாக சிடிசி தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான அறிகுறிகளையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி காய்ச்சல், வறண்ட தொண்டை, மூக்கு அடைப்பு மற்றும் இருமல் ஆகியவை குழந்தைகளிடையே ஏற்படும் சாதாரண ஒமைக்ரான் அறிகுறிகளாகும். சில குழந்தைகளுக்கு தீவிர அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மூச்சுவிடுவதில் சிரமம், முகம் மற்றும் உதடு, கைகள் நீல நிறத்தில் மாறுவது. இதயம் லேசாக வலிப்பது, குழப்பம் ஏற்படுவது, திரவப் பொருட்களை அருந்த முடியாமல் தவிப்பது மற்றும் உறக்கமின்றி தவிர்ப்பது ஆகியவை மோசமான அறிகுறிகளாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று இயக்குனர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |