Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

யாருக்கு அதிஷ்டம்… யாருக்கு லாபம்… முழு ராசி பலன் இதோ..!!

மேஷ ராசி அன்பர்களே…!! இன்று செய்தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணம் உங்களுக்கு சிறப்புவாய்ந்த தருணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்று அடுத்தவர்கள் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவு கொஞ்சம் இருக்கும்.

எதிலும் கவனம் இருக்கட்டும். கலைத் துறையை சார்ந்தவர்களுக்கு அனைத்து வகையிலுமே நன்மைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். குடும்பத்தை பொறுத்த வரை எந்தவித பிரச்சினையும் இல்லை. சரியான சூழலுடன் நடந்து செல்லும். அதே போல கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். நீங்கள் தைரியமாக எந்தவித காரியத்தையும் செய்யலாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

ரிஷப ராசி அன்பர்களே…!!  இன்று அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் ஏற்படும்.  அருகில் உள்ளவர்களின் ஆதரவு உங்களுக்கு கூடும். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மறையும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகிச்செல்லும். இன்று மாணவர்கள், ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களில் சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் பிறக்ககும். சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ்து அதிகாரம் கிடைக்கும். இன்று வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியைக் கொடுக்கும்.

கூடுமானவரை காரியங்களை செய்யும் பொழுது நிதானத்துடன் செய்யுங்கள். இன்று குடும்பத்தை பொறுத்த வரை எந்தவித பிரச்சினையும் இல்லை. மனம் நிம்மதியாகவே காணப்படும். சகோதரர்களின் ஒத்துழைப்பு இருக்கும். உங்களுடைய மனைவியின் ஒத்துழைப்பும் கொஞ்சம் கிடைக்கும். இன்று வெளியூர் பயணம் உங்களுக்கு சிறப்புவாய்ந்த அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்கும். நல்ல முன்னேற்றகரமான சூழ்நிலையையும் கொடுக்கும். இன்று தன வரவுக்கு எந்த வித குறையும் இல்லை.

கூடுமானவரை காரியங்களை செய்யும் பொழுது மட்டும் கொஞ்சம் நிதானமாக செய்யுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இன்று இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

மிதுன ராசி அன்பர்களே…!! இன்று வருமானம் உங்களுக்கு இருமடங்காக உயரும். அதாவது புதிய ஒப்பந்தங்கள் நல்லபடியாக வந்து சேரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும். நண்பரிடம் இருந்த பகை மாறும். துணிந்து காரியங்களை செய்து மனமகிழ்ச்சி கொள்வீர்கள். காரிய வெற்றியும் பெறுவீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும்.  அடுத்தவருடன் ஆலோசனை சொல்ல போய் பிரச்சனை வரக்கூடும், அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாமல் அன்பாக பேசுங்கள் நன்மையைக் கொடுக்கும். அக்கம்பக்கத்தினர் உடன் வீண் வாக்குவாதம் எதுவும் வேண்டாம். பொறுமையை கையாளுங்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு ஓரளவு உதவிகரமாக இருப்பார்கள். இன்று கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். நீங்கள் யாரிடமும் இன்று கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

அதாவது கல்வியில் ஆர்வம் அதிகமாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி, அனைத்துவிதமான செல்வ செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

 

கடக ராசி அன்பர்களே….!!! இன்று பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி கூடும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண்  அலைச்சலை கொஞ்சம் சந்திக்க நேரிடும். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. விவேகமாக செயல்படுவது வெற்றியை கொடுக்கும்.

எதிர்பார்த்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கொஞ்சம் கவனமாக இருங்கள். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள், பொறுமையாக நிதானமாக செய்யுங்கள். இன்று உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை, நல்லபடியாக இருக்கும். ஆனால் சரியான உணவு வகைகளை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். அது போலவே கணவன் மனைவிக்கிடையே  பூசல்கள் இருக்கும். எதையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித பிரச்சனையும் இல்லை. சரியான முன்னேற்றம் இருக்கும். அதுபோலவே ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும்.  அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால், ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

 

சிம்ம ராசி அன்பர்களே…!!! இன்று கவனமுடன் செயல்படவேண்டிய நாளாக இருக்கும். நண்பர்களுடன் வாக்குவாதங்கள் கொஞ்சம் தவிர்ப்பது நல்லத. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. அலுவலகத்தின் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். இன்று தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாகும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் என்ற எண்ணம் ஏற்படும். கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. எல்லாவித ஆவணங்களையும் சரியாக வைத்துக் கொள்ளுங்கள்.

வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். இன்று குடும்பத்தாருடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். இன்று முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். ஆலய வழிபாடு மனநிம்மதியைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் மாணவர்கள் கடினமாக உழைத்து தான் படிக்க வேண்டும். படித்த பாடத்தை கொஞ்சம் நினைவில் வைத்துக்கொள்வதற்கு எழுதிப் பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் சலிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்

 

கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று எவரிடமும் இனிய வார்த்தை பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலையம்சம்  உள்ள பொருள்கள் வாங்க கூடும். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள். பணவரவு எதிர்பார்த்ததைவிட குறையும். நிதானத்திற்கு மாறாக எந்த காரியத்தையும் செய்யாதீர்கள். இன்று நினைத்த காரியத்தை செல்வதற்காக நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள்.

மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும் பொழுது, அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ள நேரிடலாம். ஆகையால் நீங்கள் கொஞ்சம் பொறுமையாகவே செயல்பட வேண்டும். குடும்பத்தில் இருந்த கருத்து வேற்றுமை இன்று ஓரளவு சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்சனையும் இருக்காது. தனவரவு பொருத்தவரை சரியான நேரத்திற்கு வந்து செல்லும். கொஞ்சம் செலவு இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு நல்ல வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கருமை தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் :  3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

 

துலாம் ராசி அன்பர்களே…!!!  இன்று தடைகள் அகலும் நாளாக இருக்கும். தக்க சமயத்தில் உங்களுக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவி செய்வார்கள். உங்களுடைய இல்லத்தில் நல்ல சம்பவம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆடை ஆபரணங்கள் வாங்க கூடிய சூழ்நிலை இருக்கும். கூடுதலாகத்தான் உத்தியோகத்தில் உழைக்க வேண்டியிருக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த வேலையையும் எளிதாக செய்து முடிக்கக் கூடிய சூழல் அமையும்.

முயற்சிகள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது மட்டும் நன்மையைத் தரும். உங்களுடைய திறமை இன்று அதிகரிக்கும். மற்றவர்கள் பார்வையில் பணத்தை மட்டும் எண்ண வேண்டாம், அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொண்டால் போதும். அது போலவே கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. சுமூகமான சூழ்நிலை உருவாகும். இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை அன்பு இருக்கும், ஒற்றுமை இருக்கும், சகோதரர்களின் உதவியும் இருக்கும். உறவினர்களின் உதவியும் இன்று கிடைக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திறம்பட நீங்கள் செயல்படுவீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அண்ணன் தானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

 

விருச்சிக ராசி அன்பர்களே…!!  இன்று பிள்ளைகளால் பெருமை சேரும் நாளாக இருக்கும். முன்னோர் வழி சொத்துக்கள் கிடைப்பதில் இருந்த தாமதம் விலகும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். எதிர்ப்புகள் விலகி செல்லும். கொடுத்த வாக்கை காப்பாற்றி முடிப்பீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் இருக்கும். வரவு இருந்தபோதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் செலவு கொஞ்சம் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடனிருப்பது நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். வெளியூர் பயணம் அலைச்சலைக் கொடுத்தாலும் நல்ல அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும். கணவன் மனைவியைப் பொறுத்தவரை சிறப்பான முன்னேற்றம் இருக்கும், அன்பு இருக்கும். அதுபோலவே உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு, தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று செல்வ நிலை உயரும் நாளாக இருக்கும். திடீர் முன்னேற்றம் ஏற்படும். பாசத்தோடு பழகியவர்கள் பக்கபலமாக இருப்பார்கள் இடமாற்ற சிந்தனைகள் உருவாகும் விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். இன்று கலைத்துறையினருக்கு சிறப்பான நாளாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மந்தமான சூழல் தான் இருக்கும். மேலிடத்தை அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. இன்று வீண் அலைச்சலும் வேலைப்பளுவும் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே சின்ன பூசல்கள் இருக்கும். பேசும் போது நிதானமாகப் பேசுங்கள் வாக்குவாதங்கள் மட்டும் வேண்டாம். அதேபோல தனவரவு கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். கூடுமானவரை கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். இன்று சொத்து சேர்க்கை ஏற்படும். அதாவது வாகனம் வாங்க கூடிய யோகம், வீடு வாங்க கூடிய யோகம் போன்றவை ஏற்படக்கூடும் .இந்த முயற்சி உங்களுக்கு நல்ல பலனை கொடுப்பதாக இருக்கும். இன்று மாணவ கண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.  இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று எண்ணங்கள் எளிதில் நடைபெறும் நாளாக இருக்கும். எதையும் ஒளிவு மறைவின்றி சொல்வீர்கள். வியாபாரப் போட்டிகள் விலகிச் செல்லும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். இன்று மாணவர்களுக்கு முயற்சியில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதலாக மதிப்பெண் பெற வேண்டும் என்றால் அதிக நேரம் படிப்பது நல்லது. கொஞ்சம் கடுமையாகவே உழையுங்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி இன்றைக்கு சிறப்பாக இருக்கும்.

ஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என்று பல முறை யோசித்து செய்வது எப்போதுமே நல்லது. யாருக்கும் நீங்கள் உதவிகள் செய்யும் பொழுது ரொம்ப யோசித்து செய்யுங்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் இருக்கும். அதே போல யாருக்கும் நீங்கள் பொருட்களையோ பணத்தையோ கடனாக இன்று நீங்கள் கொடுக்க வேண்டாம். கூடுமானவரை அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். இன்று மனைவி வழியில் உங்களுக்கு சிறுசிறு தொல்லைகள் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள்.

மனைவிடம் பேசும்போது கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். எந்தவித வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பு நண்பர் களின் ஆதரவு பெருகும் நாளாக இருக்கும். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த பணவரவு சிறப்பாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனமாக செல்லுங்கள். இன்று வீண் செலவுகள் கட்டுப்படும். சேமிப்பு அதிகரிக்கும். எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக பாடுபடுவதையும் கொஞ்சம் தவிர்ப்பது நல்லது.

வருமானம் இருமடங்காக இருக்கும். எந்த வேலையைச் செய்தாலும் மனது திருப்தி  உண்டாகும். அதுபோலவே குடும்பத்திலும் நல்ல சூழ்நிலை உருவாகும் கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று மற்றவர் இடமும் நீங்கள் அன்பாக நடந்து கொள்வீர்கள். அதுபோலவே இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும் காதல் வயப்பட கூடிய சூழல் இருக்கும். ஆனால் இன்று நீங்கள் செய்வது வாகனத்தில் செல்லும்போது திரும்ப காண செல்ல வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களிலும் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

வாக்குறுதிகள் கொடுக்கக்கூடாது ஜாமீன் கையெழுத்து போட கூடாது .இதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ள போதுமானதாக இருக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடினப்பட்டு படியுங்கள். படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் எளிதில் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  வடக்கு

அதிஷ்ட எண் :  6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நீண்ட நாளைய ஆசை ஒன்று உங்களுக்கு நிறைவேறும். வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் நல்ல ஆதரவு கிடைக்கும். தொழிலில் அதிக முதலீடுகளை மட்டும் செய்ய வேண்டாம். இன்று பொறுமையை மட்டும் கையாளுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லுங்கள். அது மட்டுமில்லாமல் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். யாருக்கும் பஞ்சாயத்துகள் ஏதும் செய்யாதீர்கள். இன்று அலுவலகப் பணிகள் ஓரளவு துரிதமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவரை அனுசரித்து செல்வது சிறப்பு.

வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களுடைய உடல்நிலையிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். அலைச்சலும் கொஞ்சம் இருக்கும். இன்று ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். கூடுமானவரை முடிந்தால் ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் சிறப்பாக இருக்கும். யாருக்கும் வாக்குறுதிகளையும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். இன்று பலவிதமான குழப்பங்களுக்கு ஆளாகக்கூடும். கூடுமானவரை மனதை அமைதியாக வைத்துக் கொண்டு எதைப் பற்றியும் கவலைப் படாமல் நிதானமாக செய்யுங்கள்.

இன்று மாணவர்கள் கொஞ்சம் கல்வியின் முன்னேறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய  அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள் உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |