பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா நாட்டில் ‘ஹுங்கா டோங்கா’ என்ற தீவு பகுதியில் கடலுக்கு அடியில் திடீரென எரிமலை வெடித்து சிதறியுள்ளது. அதனை தொடர்ந்து சுனாமி அலையும் கடலில் உருவானது. இதனால் அந்த தீவில் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் சுனாமி அலைகள் புகுந்தது. அதோடு மட்டுமில்லாமல் எரிமலை மீண்டும் வெடிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அங்குள்ள மக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில் அமெரிக்க ஊடகங்கள், அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகள் முழுமைக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளன. அதாவது அமெரிக்காவின் வாஷிங்டன், ஒரேகான், கலிபோர்னியா, தெற்கு அலஸ்கா, அலஸ்கான் தீப கற்ப பகுதி, தென்கிழக்கு அலஸ்கா, அலுடியன் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு திடீரென சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரைக்கு மிக அருகாமையில் இருப்பவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.