Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “நீண்ட நாள் ஆசை நிறைவேறும்”.. பஞ்சாயத்துகள் ஏதும் செய்யாதீர்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நீண்ட நாளைய ஆசை ஒன்று உங்களுக்கு நிறைவேறும். வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் நல்ல ஆதரவு கிடைக்கும். தொழிலில் அதிக முதலீடுகளை மட்டும் செய்ய வேண்டாம். இன்று பொறுமையை மட்டும் கையாளுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லுங்கள். அது மட்டுமில்லாமல் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். யாருக்கும் பஞ்சாயத்துகள் ஏதும் செய்யாதீர்கள். இன்று அலுவலகப் பணிகள் ஓரளவு துரிதமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவரை அனுசரித்து செல்வது சிறப்பு. வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

உங்களுடைய உடல்நிலையிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். அலைச்சலும் கொஞ்சம் இருக்கும். இன்று ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். கூடுமானவரை முடிந்தால் ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் சிறப்பாக இருக்கும். யாருக்கும் வாக்குறுதிகளையும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். இன்று பலவிதமான குழப்பங்களுக்கு ஆளாகக்கூடும். கூடுமானவரை மனதை அமைதியாக வைத்துக் கொண்டு எதைப் பற்றியும் கவலைப் படாமல் நிதானமாக செய்யுங்கள்.

இன்று மாணவர்கள் கொஞ்சம் கல்வியின் முன்னேறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய  அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள் உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படுத்திக் கொடுக்கும்.

 

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |