மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்த விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டத்திம்மனஅள்ளி பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முருகேசன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சோக்காடி கூட்டுரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக நட்ராஜ் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நாகராஜ் மற்றும் முருகேசன் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.