தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துறை தேர்வுக்கான தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக அரசுத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள், அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு ஆகியவற்றுக்கான அனைத்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் TNPSC நடத்தும் துறைத்தேர்வுகளுக்கான முடிவுகள் அச்சிடப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டு வந்தது. ஆனால் இனி வரும் காலங்களில் இத்தேர்வு முடிவுகள் அனைத்தும் இ-புல்லட்டின் மூலம் வெளியாகும் என்று அறிவக்கப்பட்டுள்ளது.இது குறித்து நில அளவை பதிவேடுகள் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய நேர்முக கடிதத்தில், மே-2021 ல் நடத்தப்பட்ட துறைத்தேர்வு முடிவுகள் அரசிதழ் e bulletin வாயிலாக தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
இனி தமிழ்நாடு தேர்வாணைய துறைத்தேர்வு முடிவு வெளியீடுகளை அச்சிட்டு வெளியிடுவது என்பது கைவிடப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே இணையதள வெளியீட்டினை ஆதாரமாக கொண்டு தகுதிகாண் பருவம் விளம்புதல், பதவி உயர்வுகள் போன்றவற்றை பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில் மேற்கொள்ள ஏதுவாக, தேர்வு முடிவுகள் e-bulletin வழியாக வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.