இன்று சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது .
ராமநாதபுரம்,திருநெல்வேலி,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கிழக்கு திசை காற்றின் தாக்கம், வெப்பச்சலனம் காரணத்தால்,லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்றும், தென் தமிழகத்தில் சில இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் தூத்துக்குடி,ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சில இடத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.