Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பள்ளியில் அனுமதி இல்லை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு பள்ளியில் அனுமதி இல்லை என்று அரியானா அரசு அறிவித்துள்ளது.

15 முதல் 18 வயது உள்ள சிறுவர்களுக்கு நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பள்ளியில் அனுமதி இல்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். ஆகவே தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Categories

Tech |