கஜகஸ்தான் நாட்டில் ஏற்பட்ட வன்முறை குறைந்திருக்கும் நிலையில், கொரோனா தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது.
கஜகஸ்தானில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக நாடு முழுக்க மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இதனால் அங்கு வன்முறை வெடித்தது. மேலும், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதன் காரணமாக, அங்கு வன்முறை குறைந்தது.
ஆனால், தினசரி கொரோனா எண்ணிக்கை 1500 ஆக அதிகரித்திருக்கிறது. தலைநகரான நுர் சுல்தான், அல்மாட்டி போன்ற நகரங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால், மருத்துவமனைகளில் விரைவாக படுக்கை பற்றாக்குறை உண்டாகக்கூடிய அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.