கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் பரவல் காரணமாக கேரளாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணைகள் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் என்று அறிவித்து கேரள நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் தவிர்க்க முடியாத வழக்குகளில் மட்டுமே நேரடி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.