அரசுப் பள்ளி ஆசிரியை கல்லூரி வகுப்பறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சபவத்தில் ஒரு புதிய திருப்பம்.
சென்னை பெரம்பூரில் இருக்கும் மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் ஹரி சாந்தி. நேற்று மதியம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரிக்கு போன இவர் கல்லூரியின் முதல் தளத்தில் இருக்கும் தெலுங்கு வகுப்பறைக்கு சென்றுள்ளார். காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த ஊழியர்கள் வகுப்பறைக்குள் ஹரி சாந்தி மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் கிடந்ததாக ஊழியர்கள் கூறுகின்றனர்.
தகவல் அறிந்த அரும்பாக்கம் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது இடது கையின் மணிக்கட்டில் கத்தியால் கிழித்த காயம் இருப்பதாக போலீசார் கூறியுள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன் ஹரிசாந்தி டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணியாற்றி வந்துள்ளார் .
பின் அரசு வேலை கிடைத்ததால் கல்லூரியில் இருந்து விலக பள்ளிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இவர் கல்லூரியை விட்டு நீங்கி இருந்தாலும் அடிக்கடி கல்லூரிக்கு வந்து பழைய நண்பர்களைச் சந்தித்து செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று மதியம் கல்லூரிக்கு வந்த அவர் பேராசிரியர் நடராஜன் மற்றும் சிலரிடம் அதிகநேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
இந்நிலையில் கல்லூரி நேரம் முடிந்தும் ஹரிசாந்தி அங்கிருந்து புறப்படவில்லை என்று கூறப்படும் நிலையில் அவர் பேசிய அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்திவந்தனர்.மேலும் தெலுங்கு வகுப்பறை,பிற இடங்களில் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இதன்பேரில் தெலுங்கு பேராசிரியர் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார் .ஹரிசாந்திக்கும், நடராஜனுக்கும் முதுகலைப் படிக்கும் போது மலர்ந்துள்ள காதல், கல்லூரியில் வேலைக்கு பிறகும் தொடர்ந்துள்ளது. இதற்கிடையே ஹரிசாந்திக்கு அரசு பள்ளியில் வேலை கிடைத்ததும் அவர் அங்கு சென்றுவிட்டார்.
இதனால் இருவருக்கும் இடையே தொலைவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நடராஜனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகி உள்ளது. இருப்பினும் ஹரிசாந்தி கல்லூரிக்கு வந்து நடராஜனை பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்துள்ளார் .இதை மறுத்துவிட்டு சபவத்தன்று நடராஜன் அங்கிருந்து சென்று விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஹரிசாந்தி தான் வைத்திருந்த துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து விசாரணையில் தற்கொலைக்கு தூண்டியதாக நடராஜன் கைது செய்யப்பட்டார் .