தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கும், வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் புதுச்சேரியில் இருந்து வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அதாவது உரிய காரணம் இன்றி தமிழகம் வருவோரை எல்லையில் காவல்துறையினர் நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர்.