Categories
மாநில செய்திகள்

பெண் பிள்ளைகளின் பெற்றோர் கவனத்திற்கு….!! 5 லட்சம் வரை பெறலாம்….!! மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!

மத்திய அரசு பெண்குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்கலாம். அதனால் பெண்குழந்தை வைத்திருக்கும் அனைவரிடமும் இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த செல்வமகள் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை சேமிக்கலாம். இத்தகைய சேமிப்பு தொகைக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும். இதற்கிடையில் பணம் தேவை என்றால் கணக்கு தொடர்ந்து 5 ஆண்டுகள் முடிவில் பணம் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இதன் முதிர்வு காலமான 21 ஆண்டுகள் முடிவடைந்த பின்னர் சேமிப்பு தொகையில் 3 மடங்கு தொகை கிடைக்கும். இந்த கணக்கை பெண் குழந்தையின் 18 வயது வரை மட்டுமே கணக்கை தொடங்கியவர் இயக்க முடியும்.

Categories

Tech |