Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பொங்கல் பண்டிகைக்காக வந்த நபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவையில் கார்பென்டராக வேலை பார்த்து வந்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகராஜ் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சாப்பாடு வாங்குவதற்காக நாகராஜ் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார். இவர் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வெங்கிட்நாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நாகராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |