சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் இஸ்ரேல் நாட்டில் புதிதாக கொரோனாவால் 39,015 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,68,135 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 8,303 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே மருத்துவமனைகளில் 387 பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.