இஸ்ரேல் நாட்டில் புதிதாக கொரோனாவால் 39,015 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,68,135 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 8,303 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே மருத்துவமனைகளில் 387 பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் நிதி மந்திரி அவிக்டோர் லீபர்மேனுக்கு 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்திய பிறகும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மந்திரி வீட்டு தனிமையில் இருப்பதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.