Categories
தேசிய செய்திகள்

தள்ளி போக சொன்னது ஒரு குத்தமா…?? மருத்துவர் செய்த கொடூர செயல்…..!! பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி…..!!

மத்தியப் பிரதேசத்தில் ஒரு கும்பல் வயதான பெண்ணைத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் கொடூரமாகத் தாக்க படுபவர்கள் மத்திய பிரதேசத்தின் இந்தூரின் பன்வர்குவான் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் துவாரகா பாய் மற்றும் அவரது மகன் ராஜு எனக் கூறப்படுகிறது. தங்கள் காய்கறி உள்ள தள்ளுவண்டிக்கு முன்னால் நிறுத்தியிருந்த காரை நகர்த்துமாறு காரின் உரிமையாளாரான மருத்துவரிடம் அந்தப் பெண் கூறியுள்ளார்.

இந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த மருத்துவர், தனது கிளினிக்கிற்கு போன் செய்து ஊழியர்களை வர வைத்து தாயையும் மகனையும் தாக்கி தள்ளுவண்டியையே கவிழ்த்தும் போட்டுள்ளனர். இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்து வருகின்றனர்.

Categories

Tech |