தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கும், வார கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடப்படுவதாக வன உயிரினக் காப்பாளர் அறிவித்துள்ளார். மேலும் நிலைமையை மதிப்பாய்வு செய்து, அதற்கேற்ப முடிவு எடுத்து திறப்பு தேதி பின் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்