செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, ஊடகத்தில் என்னென்னமோ போடுகிறீர்கள்… இத மட்டும் போடுவதல்ல, முதலமைச்சர் அவர்கள் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு 12 மணிக்கு போறாங்க, அங்கே ஊடக நண்பர்கள் முதலமைச்சருக்கு முன்னாடி அங்க இருக்கீங்க. மைக் இருக்கு, ஆடியோ – வீடியோ இருக்கு.
அதனால் நான் இங்கு அதிகாரபூர்வமாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், என்னுடைய காதுக்கு வந்த செய்தியை நான் ஊர்ஜிதப்படுத்துவேன். என் காதில் நான் கேட்டது, எனக்கு அதிகாரபூர்வமாக பிஜேபியில் இருந்து சொன்னார்கள் என்றால் நான் ஊர்ஜிதப்படுத்துவேன். இது நானும் ஊடகம் மூலமாக பார்த்த ஒரு செய்திதான்.
ஊடக நண்பர்கள் நிறைய இடத்தில் வேகமா இருக்கிறீர்கள், உங்களுக்கு சோர்சஸ் இருக்கு. எனவே நண்பர்கள் நீங்கள்தான் செக் பண்ணனும்னு தனியார் செய்தி சேனலில் போட்ட செய்தி உண்மையா ? பொய்யா என்று…. அதைப்பற்றி நான் சொல்வது சரியாக இருக்காது.
காரணம் என்னவென்றால், ஒரு மாநிலத்தின் உடைய தலைவராக நான் பிரதமரிடம் கேட்ட செய்தியை மட்டும் தான் நான் சொல்ல முடியும். நான் இந்த பொசிசனில் இருந்து சொல்ல முடியாது. அந்த கேள்வியை எடிட்டரிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.