Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குச்சியை பயன்படுத்திய மர்ம நபர்கள்…. ஓய்வுபெற்ற சப்-கலெக்டர் வீட்டில் கொள்ளை…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

ஓய்வுபெற்ற சப்-கலெக்டரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூலப்பாளையம் என்.ஜி.ஜி. ஓ நகரில் ஓய்வுபெற்ற சப்-கலெக்டரான வெள்ளியங்கிரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டின் ஜன்னல் கதவை திறந்த மர்ம நபர்கள் குச்சியை பயன்படுத்தி மேஜையில் இருந்த 7 ஆயிரம் ரூபாயை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வெள்ளியங்கிரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதனடிப்படையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல், பிரபு மற்றும் 19 வயதுடைய இருவர் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |