Categories
தேசிய செய்திகள்

அடடே! இப்படி ஒரு ரங்கோலியா…. அப்படி என்ன ஸ்பெஷல்?…. நீங்களே பாருங்க….!!!!

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பெருமாள் சிறுவயது முதலே ஓவியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவர் இதற்கென்று தனியாக பயிற்சிக்கு செல்லாமல் தனக்கு தெரிந்தவற்றை வரைந்து வந்தார். இதையடுத்து தனது தனித் திறமையால் வருடந்தோறும் முக்கிய பண்டிகை நாட்களில் தனது வீட்டின் முன்பு கோலமாவுகளை பயன்படுத்தி ரங்கோலி ஓவியங்களை வரைந்து வந்தார்.

அதன்படி இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி தனது வீட்டு வாசலில் 7 அடி அகலம் 5 அடி உயரத்தில் விவசாயத்தையும், தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும் தனக்கு தோன்றியதை ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். அந்த ஓவியத்தில் விவசாயிகள் நாற்று நடுவது, பெண் ஒருவர் அரிவாளை கையில் வைத்துக்கொண்டு நெற்கதிர்களை அறுத்து செல்வது, ஜல்லிக்கட்டை நினைவுகூரும் வகையில் இளைஞர் ஒருவர் மாடு பிடிப்பது போலவும் தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். வியப்பூட்டும் வகையில் உள்ளது.

இந்த ஓவியத்திற்காக சுமார் 4 மணி நேரத்தில் 4 கிலோ வண்ணக்கோலம் மாவுகளை கொண்டு இந்த ஓவிய ரங்கோலி வரைந்துள்ளார். சாதாரண கோலமாவு மட்டுமே வைத்துக்கொண்டு 3d வடிவில் இந்த ஓவியத்தை பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு வரைந்துள்ளார். இவரது ஓவியத்தை பலரும் பாராட்டுவதுடன் செல்பியும் எடுத்துக்கொண்டு செல்கின்றனர்.

Categories

Tech |