கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் பொதுமக்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் வீட்டுக்கடன் அசல் மற்றும் வட்டிக்கான வருமான வரி சலுகைக்கு சட்டப்பிரிவு கொண்டுவரப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் தொழில்துறை அமைப்பான FICCI கோரிக்கை விடுத்துள்ளது.
இதுபற்றி FICCI உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தற்போது வீட்டுக்கடன் அசல் தொகை திரும்பிச் செலுத்துவதற்கு பிரிவு 80c கீழ் வரி சலுகை கிடைக்கிறது. எனினும் வீட்டுக் கடன் வட்டி தொகை திருப்பி செலுத்த உரிமை 24B கீழ் வரிச் சலுகை கிடைக்கிறது. பிரிவு 80C கீழ் பல முதலீட்டு திட்டங்கள், சிறு சேமிப்பு திட்டங்கள், இன்ஷூரன்ஸ் பாலிசி, பென்சன் திட்டங்கள் ஆகியவை கூட்டமாக இருப்பதால் வீட்டுக்கடன் அசல் தொகைக்கான வரிச்சலுகையை பலரும் பெறுவதில்லை. அதனால் வீட்டுக் கடன் அசல் வட்டி இரண்டுக்கும் சேர்த்து தனிப்பிரிவு கொண்டு வரவேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது. இதன்மூலம் வீடு வாங்குபவருக்கு புது நம்பிக்கை பிறக்கும் என்றும், வீடமைப்புத் துறையில் அதிகரிக்கும் என்றும் FICCI கூறியுள்ளது.