வேளாங்கண்ணியில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் வேற்று மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இயேசு பிறப்பு நிகழ்வுகளை கலை நிகழ்ச்சிகள் மூலமாகவும் பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலமாகவும் எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வேளாங்கண்ணி பேராலயத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.