Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சக்கரத்தில் சிக்கிய சேலை…. கணவன் கண்முன்னே நடந்த விபரீதம்…. மதுரையில் சோகம்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள சித்தாலை கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வீரலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இதனை அடுத்து சிவரக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வீரலட்சுமியின் சேலை மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கிவிட்டது.

இதனால் வீரலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக வீரலட்சுமி மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே வீரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |