Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை!!! மோடியிடம் கோரிக்கை-பழனிசாமி

டெல்லி :இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த மாநாடு டெல்லியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கும் முறையாக பேணப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இந்தியாவில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு இந்த குடியுரிமை சட்டத் திருத்தத்தினால் எவ்வித பாதிப்பும் கிடையாது எனவும் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்துள்ள இலங்கை வாழ் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென்று பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |