மீன் வியாபாரியை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள தும்மக்குண்டு கிராமத்தில் மீன் வியாபாரியான வைரவன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய சகோதரியான இந்திராவை அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவர் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் இந்திரா தனது அண்ணனான வைரவன் வீட்டிற்கு வந்துவிட்டார். இதனால் வைரவனுக்கும், ரமேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த ரமேஷ் வைரவனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த வைரவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் ரமேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.