நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் covid-19 மூன்றாம் அலை தொடங்கியுள்ளதால், ஏராளமானோருக்கு பணத் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் ஊழியர்களுக்கான சுமையையும், நெருக்கடியையும் குறைப்பதற்காக ஈபிஎப் பணத்தை 2 முறை எடுத்துக் கொள்ளலாம் என்று கடந்த ஆண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, ஒரு முறை மட்டுமே ஈபிஎப் பணத்தை எடுக்க முடியும். ஆனால் கொரோனா பாதிப்பால் ஏற்படும் எமர்ஜென்சியை சமாளிக்க 2 முறை ஈபிஎப் பணத்தை எடுத்துக்கொள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 2020_ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே வெளியாகியது.
ஈபிஎப் பணத்தை எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று தற்போது பார்க்கலாம்?
ஈ-சேவா இணையதளத்துக்கு (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/) செல்லவும்.
* UAN, பாஸ்வோர்ட் பயன்படுத்தி Log in செய்யவும்.
* அதில் Online services பகுதியில் Claim ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
* இப்போது திறக்கும் பக்கத்தில் கேட்கப்படும் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவிடவும்.
* பின்னர் வங்கிக் கணக்கு எண் பதிவிடவும்.
* வங்கிக் கணக்கு எண் சரிபார்க்கப்பட்ட பின் ‘Proceed for Online claim’ மேல் கிளிக் செய்யவும்.
* PF Advance (Form 31) ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
* அதில் பணம் எடுப்பதற்கான காரணத்தில் ‘Outbreak of pandemic’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* எவ்வளவு தொகை என்பதை பதிவிட்டு, காசோலை நகலை அப்லோடு செய்து, முகவரியை பதிவிடவும்.
* மொபைலுக்கு வரும் OTPஐ பதிவிடவும்.
இதன்பின் உங்களது பணம் எடுப்பதற்கான கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுவிடும். தகவல்கள் சரியாக இருந்தால் வங்கிக் கணக்குக்கு பணம் வந்துவிடும்.