ஆர்.ஆர். ஆர். படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.கொரோனாவின் மூன்றாவது அலை தீவிரமடைந்திருப்பதால் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிக்க அஜய் தேவ்கன், ஆலியாவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
அஜய் தேவ்கனுக்கு ரூ. 35 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார்களாம். படத்தில் அவர் வெறும் 15 நிமிடங்களே வருவாராம். 15 நிமிடத்திற்கு ரூ. 35 கோடியா என்று சினிமா ரசிகர்கள் வியக்கிறார்கள்.மேலும் ஆலியா வெறும் 20 நிமிடம் தான் வருவாராம். அதற்காக அவருக்கு ரூ. 9 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார்களாம். பாலிவுட்டில் இருந்து வந்திருப்பதால் தான் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்திருக்கிறார்கள்.