Categories
உலக செய்திகள்

நாளைக்கே தேர்தல் நடந்தா?…. யார் ஆட்சியை பிடிப்பாங்க?…. வெளியான கருத்துக்கணிப்பு முடிவு….!!!

பிரிட்டனில் பொதுத்தேர்தல் நாளைக்கே நடந்தால் மக்கள் எந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள் ? என்ற கருத்து கணிப்பு Opinium இணையத்தில் நடைபெற்றது. மேலும் இந்த கருத்துகணிப்பானது சுமார் 2,005 பேரிடம் ஜனவரி 12 முதல் 14-ஆம் தேதி வரை நடத்தப்பட்டுள்ளது. அதில் 31% பேர் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கும், 41% பேர் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் வாக்களிப்பதாக கூறியுள்ளனர். அதேபோல் 9% பேர் டெமாக்ராட்ஸ், 4% பேர் SNP, 6% கிரீன், 8% மற்ற கட்சிகளும் வாக்குகளை பெற்றுள்ளது.

அதிலும் 2013-க்கு பிறகு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி போரிஸ் ஜான்சனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிகளை விட முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். அதோடு மட்டுமில்லாமல் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி கொரோனா ஊரடங்கின் போது டவுனிங் ஸ்ட்ரீட்டில் சமூக கூட்டங்களில் கலந்து கொண்டது அம்பலமானதன் விளைவாக தற்போது பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |