Categories
சென்னை மாநில செய்திகள்

ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு…. சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா அதிகரிப்பு காரணமாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை பல்கலைக்கழகத்தில் Ph.D., படிப்பில் சேருவதற்கான கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அவகாசம் நீட்டிப்பு தொடர்பாக மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்க உறுப்பு கல்லூரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |