Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் பரிசோதனை…. 9 உபகரணங்களுக்கு ஒப்புதல்…. மத்திய அரசு அதிரடி….!!!!

கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றையும், ஒமைக்ரான் பாதிப்பின் சாத்தியக்கூறையும் கண்டறிய உதவும் வகையில் 9 பரிசோதனை உபகரணங்களுக்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. வழக்கமாக சளி மாதிரிகள் மூலம் உடலில் திநுண்மி மரபணு இருக்கிறதா என்று ஆர்டி- பிசிஆர் ஆய்வின் மூலம் கண்டறியலாம். அதில் ஆர்டிபிசிஆர் உபகரணங்களின் மூலம் புதிய வகை தொற்று பாதிப்பு இருக்கிறதா என்று முதல்நிலை ஆய்வுகளை செய்ய முடியும். அதே போன்று தீநுண்மிக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உடலில் உருவாகி இருக்கிறதா என்பதை துரித பரிசோதனை உபகரணங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் இந்தியாவில் அந்தப் பரிசோதனை ஆர்டிபிசிஆர் உபகரணங்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் பல்வேறு நிறுவனங்கள் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளன. அதில் இந்தியா, சீனா தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் உபகரணங்களை  பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அவர்களின் விண்ணப்பங்களை தரப் பரிசோதனை செய்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் புதிதாக 9 உபகரணங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இவற்றின் மூலம் 243 துரிதப் பரிசோதனை உபகரணங்கள் 243 ஆர்டிபிசிஆர் உபகரணங்கள் என்று மொத்தம் 486 உபகரணங்களை பயன்படுத்த இதுவரை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |