Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த டயர்…. தாறுமாறாக ஓடி கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதுடைய அத்வைக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தை, மகன் இருவரும் திருப்பத்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும் சர்வீஸ் சாலையில் வேகமாக சென்ற போது எதிர்பாராதவிதமாக காரின் முன்பக்க டயர் வெடித்தது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருக்கும் இரும்பு தடுப்பின் மீது மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் ராஜேஷும், அவரது மகனும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |