ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்து கொண்டே வருகிறது. மளிகைப் பொருட்களில் தொடங்கி மருந்து, உணவு, உடை உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த காலத்தில் ஆன்லைனில் ஆர்டர் தேவை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது என்றே கூறலாம். கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கினர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் அனில்குமார். 32 வயதுடைய இவர் ஆன்லைனில் ஒரு கைக்கடிகாரத்தை பார்த்துள்ளார். அந்தக் கைக்கடிகாரத்தை வாங்குவதற்காக உடனே ஆர்டர் செய்துள்ளார். மேலும் ஆன்லைன் மூலம் அந்த கடிகாரத்துக்கான 2,400 ரூபாயையும் செலுத்தியுள்ளார். இதையடுத்து அவருக்கு 15-ஆம் தேதி அந்த கடிகாரம் வந்துசேரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அணில் குமாருக்கு நேற்று முன்தினம் ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை ஆவலுடன் பிரித்து பார்த்தபோது, பார்சலில் வந்த சிறிய அட்டைப் பெட்டிக்குள் தண்ணீர் நிரப்பப்பட்ட நிலையில் ஒரு ஆணுறையும், சாதாரண ஒரு ஆணுறையும் இருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அந்த பார்சலை கொண்டு வந்தவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் எனக்கு பார்சலை உங்களிடம் கொடுக்கும் வேலை தான். ஆனால் அதில் ஆணுறை வந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். உடனே அவர் தான் ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மைய அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் அவர்கள் உரிய பதிலை தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த அனில்குமார், இந்த சம்பவம் பற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.