ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசனுக்கான ஏலம் நேற்று கொல்கத்தாவில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதல் வீரராக ஏலத்தில் விடப்பட்ட கிறிஸ் லின்னை, அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. இவர் கடந்த சீசன்களில் கொல்கத்தா அணியில் விளையாடியவர் ஆவார்.
இதனிடையே தான் மும்பை அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கிறிஸ் லின், ‘நல்ல நகரம், நல்ல நிர்வாகம், நல்ல மைதானம், இனி பும்ராவிற்கு எதிராக விளையாட வேண்டியதில்லை. அடுத்த ஐபிஎல் தொடருக்கு காத்திருக்க முடியவில்லை’ என பதிவிட்டிருந்தார். இதைக் கண்ட பும்ரா, ‘ஹாஹா அணிக்கு உங்களை வரவேற்கிறேன். எனினும் நீங்கள் வலைப் பயிற்சியில் என்னை சந்திக்க வேண்டும்’ என பதிவிட்டிருந்தார்.
இந்திய அணியின் ஜாஸ்பிரித் பும்ரா, உலகில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் அச்சுறுத்தலான பவுலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
@mipaltan ✅
Great City ✅
Quality Franchise ✅
Flat wicket ✅
Don’t have to play against @Jaspritbumrah93 ✅Can’t wait for @IPL 2020
— Chris Lynn (@lynny50) December 19, 2019
Haha, welcome to the team! @lynny50 You’re still going to have to face me in the nets. 😋
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) December 19, 2019