Categories
மாநில செய்திகள்

வட கடலோர மாவட்டங்களில்…. இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

தமிழக வட கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய  வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

அதேபோல பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,
சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |