Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….!!வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில  வாரங்களுக்கு முன் பருவமழை கொட்டி தீர்த்து வந்த நிலையில்  மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில்  சென்னை, மற்றும் புறநகர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் இன்று காலை  தொடங்கி மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை மெரினா, மந்தைவெளி, வேப்பேரி, பெரியமேடு, மெரினா, மந்தைவெளி, கோடம்பாக்கம், கிண்டி, கே.கே.நகர் பகுதிகளிலும் எதிர்பாராதவிதமாக  மிதமான மழை பெய்ய தொடங்கியது.  மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில்  மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |