தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை கொட்டி தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல் தொடர்பாக சென்னையில் உள்ள மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று கன மழை கொட்டி தீர்க்கும் என்பதை மஞ்சள் வண்ணத்தில் குறிப்பிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக ராமநாதபுரம் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறி இருக்கிறது. சென்னை மாநகரைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இன்று தொடங்கும் மழைப்பொழிவு வருகிற 23-ஆம் தேதி வரையிலும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.