Categories
தேசிய செய்திகள்

குடியரசு தின அணிவகுப்பு…. தமிழக ஊர்தி நிராகரிப்பு…. வெளியான தகவல்….!!!!

நாட்டின் தலைநகர் டெல்லியில் இந்திய பிரதமர் மறைந்த இந்தியப் படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீர வணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையிடுவார். இதையடுத்து அந்த விழாவில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்களில் சார்பில் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும்.

இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாக கூறி, வ.உ. சி,வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது ஆண்டு பிறந்த நாளையொட்டி மேற்கு வங்கத்தின் சார்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டுள்ளதாக என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |