நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பசி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான வழக்கில் யாரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது என்றும், பொது இடங்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் கட்டாயம் என்றும், எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது மத்திய அரசு. அதாவது வேக்சின் போட்டுக்கொள்வதை ஒருபோதும் கட்டாயமாக்கவில்லை என்பதை அரசு தெளிவு படுத்தியுள்ளது.