Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 14 சதவீதம் உயர்த்தப்படும் என்று டிசம்பரில் முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து 31 சதவீதமாக உயர்ந்த அகவிலைப்படி, அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு பொருந்தாது என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது. மறுபுறம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 31 சதவீத அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
அகவிலைப்படி உயரும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |