Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி…. வீட்டிலிருந்தே ஈஸியா பத்திரம் பதிவு செய்யலாம்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் மொத்தம் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்குகின்றன. அதன் மூலம் வீடு மற்றும் விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் பத்திர பதிவு செய்ய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலமாக எங்கிருந்து வேண்டுமானாலும் பத்திர பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். ஆனால் பத்திரப்பதிவு செய்ய பொதுமக்கள் நேரில் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இதனால் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பொதுமக்களிடம் பத்திரப்பதிவுக்கு பல இடங்களில் லஞ்சம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு வகையில் பத்திரப்பதிவு துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அரசு கொண்டுவர முடிவு செய்தது. அதன்படி பொதுமக்கள் இனிவரும் காலங்களில் பத்திரம் பதிவு செய்ய நேரில் வர வேண்டிய அவசியமில்லை.

அதேசமயம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த சில நிமிடங்களிலேயே ஆய்வு செய்து அந்தப் பத்திரத்தை பதிவு செய்து திருப்பி தரும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் முதற்கட்டமாக சோதனை முறையில் தமிழகத்தில் 5 சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தின் சோதனை முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில் தொடர்ந்து மற்ற அலுவலகங்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பதிவு துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |